கஷ்டப்பட்டு கட்டிய வீட்டிற்கு கலாச்சார முறைப்படி பால் காய்ச்சிய அறந்தாங்கி நிஷாவின் வீடியோ காட்சி இணையவாசிகளிடையே வைரலாகிவருகிறது.

மீடியாத்துறைக்கு அறிமுகம்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘கலக்க போவது யாரு’ என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியவர் அறந்தாங்கி நிஷா.

நிஷாவின் முயற்சியால் தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளத்திரைக்கு சென்று விட்டார். தனுஸ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நயன் நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பும் கிடைத்தது, அதிலும் கலக்கியுள்ளார்.

இந்த நிலையில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் நிஷா மீடியாத்துறையில் உழைத்த பணத்தில் சொந்த ஊரில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

அப்போது அந்த வீட்டின் கட்டுமாண பணி முதல் பால் காய்ச்சும் பணி வரை நிஷா செய்யும் வேலைகள் வரை அவரது யூடியூப் சேனலில் வீடியோ பதிவேற்றிக் கொண்டே இருந்தார்.

இதனை பார்த்த நிஷா ரசிகர்கள் நிஷாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துடன், இந்த வீடியோ 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் ட்ரெண்டிங்கில் ஒன்பதாவது இடம்பிடித்துள்ளது.

மேலும் நிஷாவின் வீட்டின் பெறுமதி 1 கோடி அதிகம் எனவும் கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றார்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares