நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாகதமிழ் திரையுலகில் அறிமுகமாகி நடிகர் கதையாசிரியர் இசையமைப்பாளர் எழுத்தாளர் பாடகர் சிறப்பாக நடனமாடுபவர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமையை கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றி புகழ் பெற்றவர்,இவர் முதன்முதலில் 2002ம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நாயகனாக நடித்து தனது திரைப்பயணத்தை தமிழில் தொடங்கினர்.

அதற்கு அடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார் மேலும் இவரின் பேரில் பல சர்ச்சை செய்திகளும் அதிகளவாகவே இருந்து வந்தது இவர் நடிக்கும் சில நடிகைகளோடு காதல் வயப்பட்டதாகவும் அவை எதுவுமே சரிவரவில்லை எனவும் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டிருந்தது இவர்களில் ந யன் தா ரா , ஹன் சிகா வுட ன் ஏற்பட்ட கா த ல் விடயங்கள் தான் பெரிதாகப் பேசப்பட்டது.

இதனால் இவர் சில காலம் படங்கள் எதிலும் நடிக்காமல் விலகியிருந்து மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க ஆரம்பித்தார் அண்மையில் கூட வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பத்து தல திரைப்படம் வெளியாகவுள்ளது.

திருமணத்திற்கு தயாரான சிம்பு இத்தனை நாள் சிம்புவின் திருமணத்திற்கு காத்திருந்த இரசிகர்களுக்கு தற்போது நல்ல செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது, திருமணம் வேண்டாம் என இருந்த சிம்புவிற்கு விரைவில் திருமணம் ஆகவுள்ளதாகவும் விரைவில் அவரின் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் சிம்புவுக்கு கோடீஸ்வர பெண்ணை பேசி முடித்து இருப்பதாக ஒரு தகவல் திரை உலகில் வேகமாக பரவி வருகிறது மருத்துவம் படித்திருக்கும் அந்தப் பெண் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் அவர் சிம்புவின் தீவிர ரசிகை எனவும் அவருடைய தந்தை பல தொழில்களை செய்யும் தொழிலதிபர் எனவும் கூறப்படுகிறது அந்தவகையில் எல்லோரும் எதிர்பார்த்தது போல சிம்புவின் திருமணம அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares