இந்தியில் எலாச்சி, மலையாளத்தில் ஏலக்கா, தெலுங்கில் எலக்குழு, கன்னடத்தில் யலேக்கி, குஜராத்தி மொழியில் இலைச்சி, நேபாளி மொழியில் ஹர்தயா ரோகா, அரபி மொழியில் ஹுபா அல்ஹால் என்றும் அழைக்கப்படுகிறது. ஏலக்காய் என்னும் மசாலா “ஜிங்கிபெராசியே” குடும்பத்தை சேர்ந்த பல தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படும் விதைகள்தான்.
ஏலக்காய் இந்தியா, பூட்டான், நேபாளம் மற்றும் இந்தோனேசியாவை பூர்விகமாகக் கொண்டது. இதன் காய்கள் சிறியவை. ஏலக்காய் முக்கோணவடிவமும் உள்ளே விதைகள் சுழல் அச்சுகளாகவும் இருக்கும்.உங்கள் வீட்டில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு சிறப்பான உணவிலும் நீங்கள் ஏலக்காயின் சுவையை ரசித்திருப்பீர்கள். குறிப்பாக, இனிப்பு வகைகளில் பெரும்பாலும் நாம் ஏலக்காய் அவசியமாக சேர்ப்போம்.
அதை உணவில் சேர்ப்பதற்கும் காரணம் இருக்கிறது. ஏலக்காயில் மனிதனுக்கு தேவையான மகத்தான நன்மைகள் உள்ளன. நீங்களும் ஏலக்காயை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்ள மேற் கொண்டு கீழே உள்ள விடியோவை பாருங்க.
