மயில்சாமி ஒரு இந்திய நடிகரும் நகைச்சுவை நடிகர் ஆவார், இவர் துணை வேடங்களில் முக்கியமாக நடித்துள்ளார். பல தமிழ் படங்களில் தோன்றிய இவர், சென்னையில் சன் டிவியில் அசத்தபோவது யாருக்கு வழக்கமான கெஸ்ட் நடுவராகவும் இருக்கிறார். இவர் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ப்ரம்மானந்தம், அலி ஆகியோருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்துள்ளார். மேலும் விஜய்யின் செல்வா படத்தில் மணிவண்ணனுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார்.

இவரை விவேக்குடன் பட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர் ஆவார். இவர் சினிமா மட்டுமல்லாமல் பொதுநலம் குறித்து சிந்தித்து அதன் மேல் கவனம் செலுத்துவார் இந்த ஒரு காரணத்தினாலேயே இவர் மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர். இவர் நடிப்பை தாண்டி பல டிவி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் உள்ளார். அவரது பெயர் அருமைநாயகம். இவருக்கு மேடை பெயராக அன்பு என்று குறிப்பிடப்படுகிறது.

இவர் இவரது மகன் இயக்கிய படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் படம் நின்று போனது. இந்நிலையில், சென்னையில் சாலிகிராமத்திலுள்ள வீட்டில் வசித்து வந்த இவர் தி டீர் உ டல்நலக்கு றைவால் உ யி ரி ழந்தார். குடும்பத்தினர் இவரை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் இவர் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே உடலை வி ட்டு உயிர் பி ரி ந்துவி ட்டது. இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares