யூரிக் அமிலம் என்பது ஒரு இயற்கையான கழிவுப் பொருளாகும். இது ப்யூரின் நிறைந்த உணவுகள் செரிமானவதைத் தொடர்ந்து உடலில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பொருள். ப்யூரின் என்பது கார்பன் மற்றும் நைட்ரஜன் அணுக்களால் ஆனா ஒரு இரசாயன சேர்மங்கள் ஆகும். இவை உடலால் உடைக்கப்படுகின்றன.
நாம் எப்போது ப்யூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறோமோ, அப்போது நம் உடல் அதை ஜீரணிக்க தவறக்கூடும். இது உடலில் யூரிக் அமில அளவுகள் அதிகரிக்க வழிவகுக்கும். இரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகமாக இருக்கும் நிலையை ஹைப்பர்யூரிசிமியா என்று அழைப்பர்.
இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமானால், அது வலிமிக்க கீல்வாதத்தை உண்டாக்கும். எனவே தான் உண்ணும் உணவுகளில் எப்போதுமே மிகவும் கவனமாக இருக்க வேண்டியது முக்கியம் என்று கூறுகின்றனர். ஒருவேளை உடலில் யூரிக் அமிலம் அதிகளவில் இருந்தால், அத்தகையவர்கள் அவர்களது டயட் மற்றும் உணவுப் பழக்கத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
அதோடு ப்யூரின் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பதுடன், அதிக கொழுப்புள்ள உணவுகள் உண்பதையும் தவிர்க்க வேண்டும். இதனால் உடலில் யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்யும் திறன் குறையக்கூடும்.உடம்பில் தேங்கி இருக்கும் யூரிக் ஆசிட்டை வேகமாக குறைக்க எளிமையான வழி