யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம இருக்கணும்னு,ஒரு கைப்பிடி அரிசியில் 5 ரூபாய் நாணயத்தைப் போட்டு அதை துணியிலோ பாத்திரத்திலோ போட்டு பீரோவில் வைத்தால் கஷ்டம் தீருமாம் அது பற்றி விளக்கமாக இந்த பகுதியில் பார்க்கலாம்.
சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும் அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள் ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது காலதாமதமோ ஆகிவிடுகிறது பொதுவாக பரிகாரங்கள் வீடுகளுக்கு வுறாகவும் தொழில் செய்யும் இடத்துக்கு ஒன்றாகவும் செய்வார்கள்.
வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால் அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும் அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம்.
ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள் அதற்குள் முனை உடையாத (கைக்குத்தல்) பச்சரிசி அல்லது நெல்லை கொஞ்சமாக எடுத்துப் போடுங்கள் அதன் மேல் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை போடுங்கள் அதன் மேல் சிறிது அரிசியைப் போட்டுஇரண்டு ரூபாய் நாணயத்தை போடுங்கள்.
பின் மீண்டும் கொஞ்சம் அரிசி இட்டு ஐந்து ரூபாய் நாணயம் அதன்மேல் கொஞ்சம் அரிசி போட்டு பத்து ரூபாய் நாணயம் ஒன்று போட்டு அதன்பின் அரிசி பாட்டில் நிறையும் வரை அரிசியையோ நெல்லையோ போட்டு நிரப்புங்கள் பின் பாட்டிலை நன்கு இறுக்கமாக மூடி போட்டு மூடுங்கள் அந்த மூடியில் சிறிது சிறிதாக ஆறு துளைகள் போடுங்கள் இப்படி அரிசியும் ஒரு ரூபாய் காசுகளும் நிரம்பிய அந்த பாட்டிலையோ அல்லது பானையையோ வீட்டின் அலுவலக அறை, பூஜை அறை, வரவேற் பறையில் வைக்கலாம்.