இந்த அவசர காலத்தில் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, இருவருக்கும் இருக்கின்ற ஒரே பிரச்சனை முடி உதிரும் பிரச்சனை தான். தலை முடி உதிர்வதற்கு முக்கிய காரணம். மன அழுத்தம், முறையற்ற உணவு முறை, ஒழுங்கற்ற பராமரிப்பு, உடல் உஷ்ணம் என பல காரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.
இருப்பினும் தலை முடியை ஒழுங்காக பராமரித்து வந்தாலே முடி உதிர்வு பிரச்சனை குறைந்து முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். முடி உதிர்வு பிரச்சனை ஏற்பட்டால் பொதுவாக நாம் என்ன செய்வோம்? கடையில் விற்கப்படும் hair oil வாங்கி பயன்படுத்துவோம். அப்பவும் முடி உதிர்ந்து கொண்டே இருக்கும்.
எனவே கூந்தல் நன்கு அடர்த்தியாக வளர்வதற்கு கெமிக்கல் நிறைந்த எண்ணெயை பயன்படுத்துவதற்கு பதிலாக, நமக்கு இயற்கை அளித்த சில மூலிகை பொருட்களை வைத்து வீட்டில் இருந்தபடியே கூந்தல் எண்ணெய் எப்படி தயாரிப்பது என்று இவற்றில் நாம் காண்போம்.
