இன்று நிறைய பேருக்கு தொப்பையைக் குறைப்பது ஒரு இலக்காக உள்ளது. தொப்பை ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மோசமான உணவு முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற முக்கிய காரணங்களாகும். பெரும்பாலான மக்கள் தொப்பையால் அதிகம் சிரமப்படுகிறார்கள்.
உடலில் வயிற்றுப் பகுதியில் தான் எளிதில் கொழுப்புக்கள் தேங்கும். அதேப் போல் உடலிலேயே வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்பைக் கரைப்பது தான் மிகவும் கடினம். வயிற்றுப் பகுதியில் தேங்கும் கொழுப்புக்களால் வயிறு வீங்கி அசிங்கமாக காணப்படுவதோடு, உடல் எடையை அதிகரித்து பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக தொப்பை உள்ளவர்களுக்கு இதய நோயின் அபாயம் அதிகம் உள்ளது.
ஆகவே தான் வயிற்றுக் கொழுப்பிற்கான காரணங்களை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இதனால் எளிதில் தொப்பையைக் குறைக்க சரியான தீர்வைக் காணலாம்.உடல் எடையை குறைப்பது எளிதானது அல்ல, குறிப்பாக தொப்பை கொழுப்பைக் குறைப்பது எவ்வளவு கடினம் என்பது நம்மில் பலருக்குத் தெரியும். வயிற்றைச் சுற்றிலும், வயிற்றுத் தசைகளுக்குக் கீழும், முக்கிய உறுப்புகளைச் சுற்றியும் சேரும் கொழுப்பு,
இது உள்ளுறுப்பு கொழுப்பு என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் இழக்க மிகவும் கடினமான கொழுப்பு வகையாகும். இது இதய நோய்கள், டைப்-2 நீரிழிவு, அதிக கொழுப்பு, சில புற்றுநோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பல ஆரோக்கிய பக்கவிளைவுகளையும் கொண்டுள்ளது. இது ஒரு நபரின் தோற்றத்தை சிதைப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கு கணிசமான ஆபத்துகளையும் ஏற்படுத்துகிறது.