நடிகை சரண்யா பொன்வண்ணனின் இரு மகள்களை யாரும் பார்த்திருக்கீங்களா ?? அட இவங்களும் பிரபல நடிகையா .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!

சினிமாவில் தொடர்ந்து வயதானாலும் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு தகுந்த திறமை இருக்க வேண்டும். அந்த வகையில் நடிகைகள் தங்கள் மார்க்கெட் குறையாமல் இருக்க எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருப்பார்கள். அப்படி குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அதுவும் முக்கியமாக அம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை சரண்யா. இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்பொழுது முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்த வருகிறார். தமிழில் 1987இல் முதன் முதலில் மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான ”நாயகன்” திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாய் அறிமுகமானார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தற்போது நடித்து வருகிறார். இவர் 1995இல் தன்னுடன் நடித்த நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாந்தினி மற்றும் பிரியதர்ஷினி இன்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவருக்கு ”தென்மேற்கு பருவக்காற்று” என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வழங்கப்பட்டது .

தற்பொழுது பேஷன் டிசைனிங் தொழிலில் இறங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதைத்தொடர்ந்து ஃபேஷன் டிசைனிங் கோச்சிங் கிளாஸ் எடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ணனின் இரண்டு மகள்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares