அடடே மணிரத்னம் சுஹாசினியின் மகனா இது ?? இதோ இணையத்தில் வெளியான முதல் முறையாக வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

1983ல் கன்னடத்தில் வெளிவந்த திரைப்படம் ‘பல்லவி அணு பல்லவி’. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்தினம். இதில் ஹீரோவாக அனில் கபூர் நடித்திருந்தார். இதை தொடர்ந்து தமிழில் ‘உணரு’ என்ற படத்தை இயக்கினார் மணிரத்தினம். இதில் கதாநாயகனாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து பகல் நிலவு, இதயக் கோயில், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இயக்குனர் மணிரத்தினத்தின் சாதனை பயணத்தின் சான்றுகளில் ஒன்று.

இயக்குனர் மணிரத்தினம் பிரபல நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தற்பொழுது தமிழ் சினிமாவே கொண்டாடும் பிரபல ஜோடிகளாக வலம் வருகின்றனர். இயக்குனராக மணிரத்தினம் ஒரு பக்கம் கலக்க, இன்னொரு பக்கம் சுகாசினி நாயகியாக கலக்கி விட்டு தற்போது தயாரிப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், வசனம் எழுதுபவர் என பன்முகத்திறமைகளை காட்டிக் கொண்டு வருகிறார்.

நடிகை சுகாசினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். இவர் சமீபத்தில் தனது மகன் எடுத்த அழகான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘லண்டனில் தனது மகனின் அலுவலகம் திறப்பு விழா’ என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட இவர்தான் நடிகை சுகாசினி மணிரத்தினத்தின் மகனா? என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ இணையத்தில் வெளியான புகைப்படம் .

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares