நடிகை சரண்யா மோகனின் மகளா இது ??? பார்க்க அச்சு அசலா அம்மாவை போலவே இருக்காங்களே .. இதோ முதல் முறையாக வெளியான புகைப்படம் ..!!

நடிகை சரண்யா மோகன் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் அதிகமாக மலையாள மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி மற்றும் வெண்ணிலா கபடிகுழு ஆகிய திரைப்படங்களின் மூலம் நன்கு அறியப்படும் நபரானார். காதலுக்கு மரியாதை’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சரண்யா மோகன்.

இவர் தனுஷ் உடன் ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நடித்து கலக்கியுள்ளார்.இதைத் தொடர்ந்து அவர் வினய் நடித்த ‘ஜெயம் கொண்டான்’ திரைப்படத்தில் நடித்தார்.இவர் குறிப்பாக தளபதி விஜய் உடன் நடித்த ‘வேலாயுதம்’ திரைப்படத்தில் அவருக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த நிலையில் நடிகை சரண்யா மோகன்

தனது நீண்ட நாள் காதலர் ஆன டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை 2015ல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு அனந்த பத்மநாபன் என்ற மகனும் அன்னபூர்ணா என்ற மகளும் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா மோகன் தனது மகன் மற்றும் மகளுடன் இணைந்து ஒரு சில புகைப்படங்களை எடுத்து இணையதளத்தில் வெளியிடுவார்.

தற்பொழுது அவர் சில லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ”நடிகை சரண்யா மோகனின் மகளா இவர்?..அச்சு அசலா அம்மாவை போலவே இருக்காங்களே” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ சமூக இணையத்தில் வெளியான அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க .

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares