பார்ப்பதற்கு சிறு கற்கள் போல கரடு முரடாக இருக்கும் வெந்தயம், ஆனால் உண்மையில் இதில் அடங்கியுள்ள நன்மைகள் நம் உடலுக்கு எத்தகைய பயன்களை தரவல்லது என்பது நம்மில் குறைந்த அளவு மக்களே அறிந்திருப்போம்.

வீட்டின் அஞ்சறை பெட்டியில் இடம் பெரும் உணவுப் பொருட்களில் ஒன்று. அன்றாடம் நாம் சமையவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் ஒவ்வொன்றிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அப்படி நாம் சேர்க்கும் ஒரு பொருள் தான் வெந்தயம். இன்றைய மோசமான உணவுப் பழக்கவழக்கத்தாலும், வாழ்க்கை முறையாலும் ஏராளமான நோய்கள் உடலை தாக்குகின்றன. முக்கியமாக உடலில் நச்சுக்களின் அளவும அதிகரிக்கிறது.

குறிப்பாக இரத்த குழாய்களினுள் கொழுப்புக்கள் படித்து இரத்த குழாய்களை அடைத்து, இதயத்திற்கு இரத்தம் செல்வதில் இடையூறு ஏற்பட்டு, இதய பிரச்சனைகள் மற்றும் மூளை பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

வெந்தயம் ஊற வைத்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால் அசிடிட்டியில் இருந்து விடுபட உதவும். ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.வெந்தய விதைகளில் நார்ச்சத்து மற்றும் பிற கெமிக்கல்கள் உள்ளன. இவை செரிமானத்தை மெதுவாக நடைபெற செய்து, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை உறிஞ்ச உதவுகிறது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares