உடல் பருமன் தான் இன்று பலரும் எதிர்நோக்கியுள்ள பெரும் பிரச்னை. அதிலும் மாறி வரும் இன்றைய உணவுப் பழக்க வழக்கத்தினால் யுவ,யுவதிகளும் கூட உடல் பருமனுக்கு ஆளாகின்றனர்.

இந்த பருமனான உடலும், உப்பிய வயிறும் தான் பல்வேறு நோய்களுக்கு சூத்திரதாரி ஆகிறது. ஆம்..இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, இதயநோய் உள்பட பல நோய்களுக்கு உடல் பருமன் தான் காரணம். அதனால் தான் பலரும் உடல் எடையைக் குறைக்க நடைபயிற்சி, ஜிம்முக்கு போவது என பல பணிகளையும் செய்து முயற்சிப்பர்.

இதையெல்லாம் விட சுலபான ஒரு முறையில் இரண்டே வாரத்தில் நம் உடலில் தங்கியுள்ள 2 முதல் 4 கிலோ வரையிலான கெட்ட கொழுப்பை கரைக்க முடியும். இதற்கு மூன்று ஏலக்காயே போதும். ஏலக்காயில் ஆண்டி ஆக்சிடண்ட் உள்ளது. கூடவே இதற்கு நம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் தன்மையும் உண்டு.

இந்த ஏலக்காயை குடிநீரில் சேர்த்து சாப்பிடுவதால் இதயம் சீராக இயங்கும். சுகர், அல்சரையும் இது சரி செய்யும். வயிற்றுப் புண்ணையும் குணப்படுத்தும். இனி இதன் செய்முறையை பார்ப்போம்.

முதலில் இளஞ்சூட்டில் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் மூன்று ஏலகாய்களை எடுத்து சிதைத்துக் கொள்ள வேண்டும். அதில் இருந்து விதை வெளியே வந்த நிலையில், அதை அப்படியே இளஞ்சூடான தண்ணீரில் போட வேண்டும். இந்த தண்ணீரானது தேநீர் குடிக்கும் அளவுக்கான சூட்டில் இருப்பது நல்லது.காலையில் தூங்கி முழித்து பல் துலக்கிய பின்பு, ஒருமுறை இந்த ஏலக்காய் நீரை குடித்துவிட்டு, அதன் பின்னர் தண்ணீர் தவிக்கும் போதெல்லாம் இதேபோல் குடிக்க வேண்டும்.

இந்த நீரை சாப்பாட்டுக்கு முன்னும், பின்னும் கண்டிப்பாக குடிக்க வேண்டும். இந்த நீரை அப்படியே குடிக்க முடியாதவர்கள், இந்த தண்ணீர் சேர்த்து தேயிலை(டீ) போட்டும் குடிக்கலாம். ஒரு லிட்டர் தண்ணீர் எனில் 7 ஏலக்காய் வரை இதனோடு போடலாம். போட்டு குடித்து தான் பாருங்களேன்…உங்கள் கெட்ட கொழுப்புகள் ஜிவ்வென்று பறந்து நீங்களும் சிக்கென்று மிளிர்வீர்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares