ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இன்ன வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை.முருங்கை கீரை
இலையில் நிறைய கால்சியமும், புரதமும் உள்ளது. அரிசி சோறு உண்பவர்களுக்கு, முருங்கைத் தழை ஏற்ற கீரையாகும். அரிசியில் இல்லாச் சத்துக்களை முருங்கைக் கீரை ஈடு செய்து விடும் மற்றும் நினைத்த சமயம் முருங்கை கீரை பறித்து சமையல் செய்திடலாம்.
அதன் காரணமாகவே, “ஒரு முருங்கையும் ஒரு எருமையும் உண்டானால், வருகிற விருந்துக்கு மனம் களிக்க செய்வேன்.” என்ற பழமொழி கூறப்படுகிறது. கறவை மாடுகளில் இத்தழை நன்கு பாலூறப் செய்யும்.
தண்ணீரைத் தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவும் என்று அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சரி வாருங்கள் முருங்கைக் கீரையில் இவ்வளவு பவர் இருக்கா நீங்களும் சாப்பிடுங்க