நமது அன்றாட உணவு வகைகளில் எதாவது ஒரு வகையில் நாம் அசைவ வ=உணவுகளை எடுத்து கொள்கிறோம் மேலும் பெரும்பாலனோர் அசைவ பிரியர்களாகவே உள்ளார்கள் எனலாம். அந்த வகையில் மீன் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள் எனலாம் அதிலும் கருவாடு பலருக்கு விருப்ப உணவுகளில் ஒன்றாக உள்ளது.
இருப்பினும் இந்த கருவாடு மற்றும் மீனை ஒரு சிலர் சாப்பிடுவது கூடாது என பல தகவல்கள் கூறுகின்றன. நமது பாரம்பரிய உணவுகளில் பல்வேறுபட்ட உணவுகள் இருந்தாலும் கருவாடு போன்ற உணவினை தான் அதிக பேருக்கு பிடிக்கும்.
குறிப்பாக அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத ஓர் உணவு மீன் மற்றும் கருவாடு தான். கருவாடு சிறிய துண்டு இருந்தால் தான் சிலருக்கு உணவு சாப்பிட்டது போல இருக்கும். கருவாடு, நெத்திலி எல்லாம் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் சில உணவுகளுடன் சேர்ந்து சாப்பிடக் கூடாது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கருவாடு சாப்பிட்டால் மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது. ஒரு வேலை சாப்பிடும் உணவு விஷமாக மாறிவிடும். இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உப்பு அதிகமான உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது. ஆகையால் அவர்கள் கருவாடு அதிகம் உண்ணுதல் கூடாது.
கருவாடு மட்டுமின்றி அப்பளம் மற்றும் ஊறுகாயும் கூட இவர்களுக்கு தடை செய்யப்பட்ட உணவுகள் தான். மேலும், மீன், கருவாடு சாப்பிட்ட பிறகு பால், தயிர் சாப்பிடக்கூடாது. மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.