பிக்பாஸ் வீட்டில் கதிரவன் ஏடிகே உடன் பேசிக் கொண்டு செல்கையில் மயங்கி கீழே விழுந்துள்ளதாக காணொளி வெளியாகி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எலிமினேட் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் விருந்தினர்களாக வீட்டிற்குள் வந்துள்ளனர்.
பிரபல ரிவியில் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.
கடந்த வாரம் ரச்சிதா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், இந்த வாரம் பொங்கல் பண்டியைக் கொண்டாட வெளியே சென்ற அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.
குறித்த 7 போட்டியாளர்களின் அமுதவானன் முதல் ஃபைனலிஸ்டாக சென்றுள்ளார். மீதம் ஆறு போட்டியாளர்கள் இந்த எவிக்ஷனில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் கார்டன் ஏரியாவில் ஏடிகே உடன் நடந்து சென்ற கதிரவன் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார் இவர் விழுந்ததை அவதானித்த ஏடிகே பதறியடித்து கூச்சல் போடவே அனைத்து போட்டியாளர்களும் கார்டன் ஏரியாவிற்கு சென்றுள்ளனர்.
பின்பு அசீம் கதிரவனை தூக்கிக் கொண்டு செல்ல, போட்டியாளர்கள் மெடிக்கல் ரூம் மெடிக்கல் ரூம் என்று சத்தம் போட்டுக்கொண்டு செல்கின்றனர். இதனையெல்லாம் பார்த்துக் கொண்டு மைனா நந்தினி பிக்பாஸ் கன்பெஷன் அறையில் சிரித்துக் கொண்டுள்ளார்.
கதிரவனும் கன்பெஷன் அறைக்கு தன்னை தூக்கி வந்த பின்பு தான் செய்தது நடிப்பு என்பதை சிரித்துக்கொண்டு நடிப்பு என்பதை தெரியபடுத்தியுள்ளார். அனைத்து போட்டியாளர்களும் டென்ஷனில் பதறிய தருணத்தில் கதிரவனுக்கு மைனா கொடுத்த சீக்ரெட் டாஸ்க் என்று தெரிந்ததும் அனைவரையும் எரிச்சலில் ஆழ்த்தியுள்ளது.