பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது.பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் இருக்கும் 6 போட்டியாளர்களில் வெளியேற இருக்கும் போட்டியாளர் குறித்து விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது ஆறாவது சீசன் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஏழு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இதில் அமுதவானன் நேரடியாக ஃபைனலுக்கு சென்றுள்ளார். பின்பு அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, ஏடிகே என ஆறு பேர் இந்த வார நாமினேஷனில் இருக்கின்றனர்.
இதில் வழக்கம் போல் அசீம் மற்றும் விக்ரமன் அதிகமான வாக்குகளைப் பெற்று அடுத்தடுத்து காப்பாற்றப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்து 3 மற்றும் 4வது இடங்களை ஷிவின் மற்றும் கதிரவன் பிடித்துள்ள நிலையில், மைனா மற்றும் ஏடிகே குறைவான வாக்குகளைப் பெற்று கடைசி இடத்தில் இருக்கின்றனர்.
இதனால் இந்த வாரம் இவர்களில் ஒருவர் வெளியேற்றப்பட உள்ளனர். அதிலும் ஏடிகே தான் குறைவான வாக்கினைப் பெற்று கடைசி இடத்தில் உள்ளதால் அவரே இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மீதம் இருக்கும் 6 பேரில் இருந்து ஒருவர் தான் இந்த பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் அசீம் மற்றும் விக்ரமன் இருவரில் ஒருவர் வரவே அதிக வாய்ப்பு இருக்கின்றது.