பிக்பாஸ் வீட்டிற்கு மறுபடியும் வந்திருக்கும் ராபர்ட் மாஸ்டர் ரக்சிதா பற்றி மைனாவுடன் பேசியிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்துக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் தற்போது நிறைவடைய இன்னும் கொஞ்ச நாளே இருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டு குறைவான வாக்குகளின் அடிப்படையில் 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு தற்போது 7 போட்டியாளர்களுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இதன்படி, இந்த வாரம் ரக்சிதா வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ராபட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டிலிருந்து போட்டியாளர்கள் அனைவரும் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், மைனா மற்றும் ராபர்ட் மாஸ்டர் பேசிக்கொண்டிருக்கும் போது ரக்சிதாவைப் பற்றி பேசியிருக்கிறார். அதில் அவர் “நான் போனதுக்கு அப்புறம் அவளுக்கு பிக்பாஸ் வீட்டில் விளையாட வேண்டும் என்ற Focus கம்மி ஆயிடுச்சு.

அப்புறமா இப்போ அவ வெளியே போறதுக்கு 4 நாள் முன்னாடி விக்ரமன் கூட ரெண்டு பேரும் ஒரே கலர் டிரஸ் போட்டு கலாய்ச்சு போனது கொஞ்சம் Funஆ போச்சு” என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த மைனா, “நீங்க முன்னாடி சோஃபால இருந்து அப்படியே பாத்துட்டு இருப்பீங்க. அவ ஏதாவது பண்ணிட்டே இருப்பா. எங்களுக்கே அது Funஆ தான் இருந்துச்சு.

தப்பா எதுவும் தெரியல. அப்படி தப்பா இருந்துச்சுன்னா அவளே உங்ககிட்ட சொல்லி இருப்பா. வெளிய ஒரு லவ் டிராக் போட்டு ஓடிட்டு இருந்தது தெரியாது” எனவும் தெரிவித்திருந்தார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares