பிக் பாஸ் வீட்டில் புதிய பிக் பாஸாக மணிகண்டன் மாறி, போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களுக்கு மத்தியல் ஜிபி முத்துவும் தற்போது விளையாடிக் கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் போட்டி ஆரம்பிக்கும் போது ஜிபி முத்துவை தான் இந்த சீசனுக்கான வெற்றியாளன் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார். ஆனால் இவரின் மனநிலை சரியில்லாமல் இருந்த காரணத்தினாலும் இவரின் விருப்பமின்மையாலும் பல இன்னல்களுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, மகேஸ்வரி உள்ளிட்ட 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் குறைவான வாக்குகள் பெற்றதாக கூறி வெளியேற்றப்பட்டார்கள்.
மேலும் ஆரம்பத்திலுிருந்து பிக் பாஸ் வீட்டில் வெறுக்கப்படும் போட்டியாளராக இருந்து வரும் அசீம் இன்று வரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வருகிறார். நாளுக்கு நாள் இவருக்கான ஆதரவும் அதிகரித்து வருகிறது.
புதிய பிக் பாஸ் இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் டைட்டில் வின்னர் வாய்ப்பிற்கு மிக அருகில் விக்ரமன், அசீம், சிவின் உள்ளிட்ட போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து சிவின் கதிரவனின் காதல் வலையில் இருப்பதால் அசீம் அல்லது விக்ரமன் தான் டைட்டில் வின்னர் போட்டிக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த சில தினங்களான பிக் பாஸ் வீட்டிற்குள் வெளியில் சென்ற பிரபலங்களாக வருகை தந்து போட்டியாளர்களுக்கு உற்சாகம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.
இதன்படி, அசல் கோளாறு, ராபர்ட் மாஸ்டர், ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர், தனலெட்சுமி, தற்போது மணிகண்டன் போன்ற போட்டியாளர்கள் வருகை தந்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் மணிகண்டன் புதிய பிக் பாஸாக மாறி பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறார்.அந்தவகையில் இன்றைய நாளுக்கான இரணடாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.