பொதுவாகவே நாங்கள் வீட்டில் விளக்கேற்றுவதை காலம் காலமாக கடைபிடித்துவருகின்றோம். தினமும் வீட்டில் விளக்கேற்றுவதால் எந்த வித தீய சக்திகளும் துஷ்ட சக்திகளும் விரட்டுப்பட்டு போகும்.

விளக்குகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையாக ஏற்றுவார்கள். மேலும் நாம் விளக்கேற்றும் போது மனதில் இருக்கும் குறைகளை நினைத்து ஏற்றினால் குறைகள் அனைத்தும் நிறைகளால் ஆகும் என்பது ஐதீகம்.
விளக்கேற்றும் முறை

நாம் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது அந்த விளக்கை வெறும் தரையில் வைக்கக் கூடாது.

எப்போதும் எந்த விளக்காக இருந்தாலும் அடியில் ஏதாவது ஒன்றை வைத்து விட்டு அதன் மீது தான் விளக்கை வைக்க வேண்டும். அப்படியே எதுவும் இல்லாமல் வைத்தால் அது இறைவனை அவமதிப்பதாக அர்த்தம் ஆகிவிடும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

குத்து விளக்காக இருந்தால் பச்சை அரிசியை பரப்பி அதன் மீது வைத்து விளக்கேற்ற வேண்டும்.

அதுபோல காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் பொழுது பஞ்சலோகத்தாலான தட்டின் மீது வைத்து விளக்கேற்றினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

பூஜை அறையில் எப்போதும் ஒற்றை விளக்கை ஏற்றாமல் இரண்டு விளக்கை ஏற்றுவதால் அதிஷ்டமும் நோய் இல்லாத வாழ்வும் அமையும்.

நீங்கள் விளக்கேற்றும் போது விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றினால் புகழ் அபிவிருத்தியாகும். வேப்பம் எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

திசைகள்கிழக்கு திசை நோக்கி விளக்கு ஏற்றும் போது துன்பங்கள் நீங்கி வீட்டில் இன்பம் உருவாகும். மேற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றும் போது நம் பொருளாதாரம் உயரும். கடன் தொல்லை தீரும்.

வடக்கு திசை நோக்கி விளக்கேற்ற திருமணத்தடை உள்ளிட்ட சுபகாரிய தடைகள் நீங்கும். தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது. 

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares