பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தனலெட்சுமி செய்த காரியத்தை பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்து போயுள்ளனர்.
பிக்பாஸ் தனலட்சுமி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்ட தனலட்சுமி பிக்பாஸ் மீது ஏற்பட்ட காதலால் செய்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த தனலட்சுமி ஏழைக் குடும்பத்தினை சேர்ந்தவர். இவரது அம்மா சிங்கள் மதராக துணிக்கடை நடத்தி இவரை வளர்த்துள்ளார்.

பிக்பாஸிற்குள் செல்ல வேண்டும் என்று 5 வருடமாக போராடி வந்த இவர், டப்ஸ்மேஷ், டிக் டாக், குறும்படம் என நடித்து அசத்தி தனது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் அவ்வப்போது கோப்பட்டாலும் டாஸ்க்குகளில் பல ஆண் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்தது மட்டுமின்றி, நடனத்திலும் பட்டைய கிளப்பியுள்ளார்.

தனலெட்சுமியும் அசீமும் இல்லாவிட்டால் இந்த பிக்பாஸ் சீசனே வேஸ்ட் என்று நெட்டிசன்கள் கூறும் அளவிற்கு இவர்களின் விளையாட்டு இருந்தது.

பின்பு பிக்பாஸ் வீட்டிலிருந்து 77வது நாள் தனலட்சுமி வெளியேற்றப்பட்டார், இதற்கு நெட்டிசன்கள் எவிஷன் நியாயமற்றது என்று கொந்தளித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பிக்பாஸ் மீது காதல்

இந்நிலையில் தனலெட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.

ஆம் பிக்பாஸின் லோகோவான ஒற்றை கண்ணை அவர் தனது கையில் பச்சைக் குத்தியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை எந்த அளவுக்கு காதலிக்கிறீர்கள் என்று என புகழ்ந்து வருகின்றனர்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares