பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜனனிக்கு விளம்பரப்பரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர்.

இவர்களில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார். இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

விளம்பரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்வமாக இருந்த இவர் தற்பொழுது தனியார் மொபைல் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இதனால் ஜனனிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மேலும் ஜனனி விரைவில் படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares