மூட்டுவலி என்பது முன்பெல்லாம் முதியவர்களைப் பாதிக்கும் பிரச்னையாக இருந்தது; இப்போதோ இளம்வயது பிரச்னையாக வளர்ந்து கொண்டிருக்கிறது.இன்றைய இளைய வயதினருக்கு உடல் உழைப்பு குறைந்து வருவதும் உடற்பயிற்சி இல்லாததும் இதற்கு முக்கியக்காரணங்கள்.
மாறிவரும் உணவுமுறை மூட்டுவலிக்கு அடுத்த காரணம். இளைய தலைமுறையினர் பலரும் துரித உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர்.
இதனால், சிறுவயதிலேயே உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள் வந்து அவதிப்படுகின்றனர். இது நாளடைவில் மூட்டுவலிக்கும்வழி அமைத்துவிடுகிறது.
எனவே இவற்றை ஆரம்பத்திலே கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்வதே நல்லது.அந்தவகையில் மூட்டுவலியை போக்கும் ஒரு சில இயற்கை வைத்தியங்கள் என்ன என்பதை பார்ப்போம்.