பெரியவர்களை விட குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பதால் அவர்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே அடிக்கடி ஜலதோஷம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை அவர்களுக்கு வர வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில் அவர்களை அடிக்கடி மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு பதிலாக சில வீட்டு வைத்திய முறைகளை கற்றுவைத்து கொள்வது நல்லது. ஏனெனில் மாத்திரைகள் கொடுப்பதை காட்டிலும் வீட்டு மருந்துகள் கொடுப்பது நல்லது.
சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக் குழாய் அழற்சி போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான தொடர் இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும்.
வீட்டு வைத்தியம் என்பது அனைத்து நேரத்திலும் கிடைக்கக்கூடியது, அதுமட்டுமின்றி பக்கவிளைவுகள் அற்றதாக இருக்கும். ஒருவேளை வீட்டு வைத்தியத்திலும் குணமாகவில்லை என்றால் உடனடியாக குழந்தையை மருத்துவரிடம் தூக்கிச்செல்லுங்கள். இங்கே குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கான வீட்டு மருத்துவ குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.