நமது உடலில் நுரையீரல் பல முக்கியமான விஷயங்களை செய்கிறது. சொல்லப்போனால் நுரையீரல் உடலிலேயே மிகவும் முக்கியமான உறுப்பு என்று கூட சொல்லலாம். ஏனெனில் இது தான் நம்மை உயிருடன் வைத்திருக்கிறது. பொதுவாக நுரையீரல் தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்ளக்கூடியது. ஆனால் தொடர்ச்சியாக நாம் அசுத்தமான காற்றினை சுவாசிக்கும் போது, நுரையீரல் மோசமாக பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக சிகரெட் பிடிப்பவர்களின் நுரையீரலைப் பார்த்தால், கருகிப் போன பஞ்சு போல இருக்கும். ஏனெனில் சிகரெட்டில் அந்த அளவில் தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் உள்ளன. ஆகவே தொடர்ச்சியாக சிகரெட் பிடிக்கும் போது, அது நுரையீரலின் ஆரோக்கியத்தைப் பாதித்து, பல சுவாச பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதோடு, உயிரையே பறித்துவிடும்.
தற்போது சிகரெட் பிடிப்பது ஒரு ஃபேஷனாகி விட்டதால், ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் சிகரெட்டை பிடிக்கிறார்கள். சிகரெட் பிடிப்பதால் உலகில் சுமார் 66 மில்லியனுக்கும் அதிகமானோர் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். எனவே நீங்கள் உயிர் வாழ நினைத்தால், உடனே சிகரெட் பழக்கத்தைக் கைவிடுங்கள்.
அதோடு சிகரெட்டால் நுரையீரலில் படிந்துள்ள அழுக்குகளை வெளியேற்ற முயலுங்கள். உங்களுக்கு சிகரெட் பிடித்து கருகிப் போன நுரையீரலை எப்படி சுத்தம் செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே அசுத்தமான காற்றை சுவாசித்து மற்றும் சிகரெட்டால் கருகிப் போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புத டானிக்கை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது.