நாம் வேலைகளில் ஈடுபடும்போதும் பிரயாணம் மேற்கொள்ளும்போதும் தொடர்ந்து உட்கார்ந்து இருக்காமல் ஒரு தடவையாவது எழுந்து முதுகை நிமிர்த்தி சிறிது தூரம் நடந்து சென்ற பின் மீண்டும் உட்காருவது அவசியம். உட்காரும் போது முதுகை வளைத்து சொகுசாக உட்கார வேண்டாம். செங்குத்தாக முதுகை நிமிர்த்தி அதை 90 டிகிரியில் வைத்தும் உட்காருவதும் கூடாது.
தற்கால நல்ல நாற்காலிகள் செங்குத்தாக இருப்பதில்லை. முதுகுப் புறமும் சாய்ந்திருக்குமாறு வசதியாக உட்காருங்கள். இருக்கையின் உயரமும் முக்கியமானது. உட்கார்ந்திருக்கும்போது உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும் படியானதும், முழங்கால்கள் செங்குத்தாக மடிந்திருக்கவும் கூடிய உயரம் உள்ள நாற்காலிகளாக தேர்ந்தெடுத்து உட்காருங்கள்.
உட்காரும்போது மட்டுமின்றி ஏனைய நேரங்களிலும் உங்கள் முதுகு, கழுத்து, இடுப்பு போன்ற இடங்களில் உள்ள இயற்கையான உடல் வளைவுகளைச் சரியான முறையில் பேணுவது அவசியம். நிற்கும் போதும் இது முக்கியமானது. உடலுக்கு அசௌகரியமான நிலைகளில் அதிக நேரம் நிற்க வேண்டாம். அவ்வாறு நிற்க நேர்ந்தால் அடிக்கடி உடலின் நிலையை மாற்றி நிற்பது அவசியம்.
பலரும் இடுப்பு வலி வந்தால், நீண்ட நேரம் அமர்வதால் தான் என அதனை சாதாரணமாக எண்ணி விட்டுவிடுவார்கள். ஆனால் அடிக்கடி இடுப்பு வலி வந்தால், அது நம் உடலில் உள்ள ஏதோ ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டுகிறது என்று அர்த்தம். குறிப்பாக ஆண்கள் மருத்துவரிடம் செல்ல பயந்து, இம்மாதிரியான வலிகளை கண்டு கொள்ளமாட்டார்கள்.
இந்த தினசரி பழக்கங்கள் தான் முதுகு வலி ஏற்பட முக்கியக் காரணங்கள்!!! ஆனால் இடுப்பு வலி, பல தீவிரமான பிரச்சனைகளுக்கான ஓர் அறிகுறி என்பதை மறந்துவிடாதீர்கள். ஆகவே இடுப்பு வலியை நீங்கள் சந்தித்தால், உடனே அதற்கான காரணத்தை கண்டறிந்து, அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். இந்த செயல்களும் உங்களுக்கு கழுத்து வலியை உண்டாக்கும் என்பது தெரியுமா? இங்கு ஒருவருக்கு அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கான சில காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.