கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஆலாந்துறை வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி (85) இவர் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகின்றார், உதவிக்கு யாரும் இல்லாமல் தனி ஆளாக 30 வருஷமாக இட்லி கடையை அவர் நடத்தி வருகிறார்.

அவரே இட்லி சட்னி சாம்பார் தயாரித்து விற்பனை செய்து வருகின்றார் ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்ற நிலையில் அதை ஒரு ரூபாயாக விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றார்,சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் ஏராளமானோர் தினமும் இந்த கமலாத்தாள் பாட்டி கடைக்கு வந்து சென்ற நிலையில் பாட்டி பிரபலமடைந்தார்.

இந்நிலையில், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டியின் சேவையை அறிந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவரை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார், விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு கிரைண்டர், மிக்சி ஆகியவற்றை கமலாத்தாளுக்கு ஆனந்த் மஹேந்திரா வழங்கினார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares