இந்து மதத்தின் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது வீட்டின் பூஜை அறை. ஆன்மீகத்தின் முக்கியமாகவும், குடும்பம் சுபிக்ஷமாக இருப்பதற்கு பூஜை நம் வீட்டின் பூஜை அறையில் சில பொருட்களை வைத்திருப்போம்.
பொதுவாக வீட்டு பூஜை அறைகளில் சாஸ்திரப்படி கடவுளின் புகைப்படங்களை வைத்து வழிபடுவதை நாம் அவதானித்திருப்போம். ஆனால் சிலர் சிலைகளை வைத்தும் வழிபடுவார்கள்.
இவ்வாறு சிலைகளை வைத்து வழிபடலாமா? எந்த மாதிரியான சிலைகளை வைத்து வழிபட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சிலைகளை வைத்து வழிபடக்கூடாது ஏன்?
பொதுவாக வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடுவது கூடாது. ஏனெனில் அதற்கான அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் வீட்டில் நன்மை ஏற்படும்.
இவ்வாறு வீட்டில் ஆராதனை செய்யமுடியாது என்றால், சிலைகளை வைத்து வணங்குவது கூடாது. அவ்வாறு பூஜை செய்யாமல் இருந்தால், நன்மை தரக்கூடிய சக்தி துன்பத்தினை தரும் சக்தியாக மாறி பிரச்சினை ஏற்படும்.
பூஜை அறையில் பசுவுடன் இருக்கும் கன்றும், காமதேனு சிலை, அன்னப்பூரணி, விநாயகர், மகாலட்சுமி சிலைகளை வைத்து வழிபடலாம். ஆனால் இந்த சிலைகள் அரை அடி உயரத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.
அதற்கு மேல் உள்ள சிலைகளை வைத்து வழிபட வேண்டாம். தினமும் இரண்டு வேலை பூஜை செய்ய முடியாவிட்டாலும் ஒரு நேரமாவது பூஜை செய்வது கட்டாயம்.
அதே போன்று வீடடில் விளக்கு ஏற்றும் போது குத்துவிளக்கு ஏற்றினாலும், கட்டாயம் ஒரு அகல் விளக்கு ஏற்ற வேண்டும்… இவ்வாறு ஏற்றினால் முப்பெரும் தேவிகளின் ஆசி எப்பொழுதும் நிறைந்திருக்கும்.