தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜிபி முத்து.சாதாரண மரக்கடை வைத்து வாழ்க்கையை ஒட்டி வந்தவர் இவர் விளையாட்டு தனமாக டிக் டாக்கில் வீடியோ போட தொடங்கவே அதுவே இவருக்கு வாழ்க்கை என்று மாறியது தொடர்ந்து டிக் டாக்கில் நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு வைரலாகி வந்தார் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாக்கியது.
இந்நிலையில் திடிரென டிக் டாக்கினை தடை செய்யவே செய்வதறியாது இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்த செய்தி வெளியாகி அனைவரிடமும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.
அதன்பின் இவர் யூடியூப் சேனல் தொடங்கி அதில் ரசிகர்கள் இவருக்கு அனுப்பும் கடிதங்களை நகைச்சுவையாக படித்து பிறரை சிரிக்க வைத்து பெரும் அளவில் வரவேற்பினை பெற்றார்.
தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என மிகவும் பிரபலமாகி நடிக்க தொடங்கிவிட்டார் ஜி.பி முத்து தற்போது இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் பம்பர் படத்தில் நடித்துள்ளார் தற்போது ஜி.பி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் நிகழ்ச்சியில் இருந்து குடும்பத்தை காணாமல் இருக்க முடியாது என கூறி வெளியேறினார்.
தற்போது இரண்டு நடிகைகளுடன் நடனமாடியுள்ளார் இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது வீடியோவில் நடிகைகளுடன் கலக்கலாக நடனம் ஆடி மகிழ்ந்துள்ளார் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஜி.பி முத்துவை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.