வயோதிகர்கள், சிறியவர்கள் என பாகுபாடே இல்லாமல் அனைத்து தரப்பினரையும் பாடாய் படுத்திவிடுகிறது பல்சொத்தை. இதனால் உண்டாகும் வலியும் மிகக் கொடூரமாக இருக்கும்..பொதுவாக பல்சொத்தையினால் வலியை அனுபவிப்பவர்கள் அதில் இருந்து தப்பிப்பதாக நினைத்து பல்லைப் பிடுங்குகிறார்கள். அப்படி பிடுங்குவதனால் பக்கத்தில் இருக்கும் பிற பற்களும் லூஸ் ஆகிவிடும். இதனால் அவையும் விழும் வாய்ப்பு அதிகம்.
ஆயுர்வேதத்தில் பல்சொத்தையினால் ஏற்படும் பல்வலியைப் போக்க சுலபமான ஒரு வழி இருக்கிறது. இதற்கு முதலில் குப்பைமேனி இலையை 5, அல்லது 6 எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனோடு ஒரு கிராம்பையும் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடித்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை தினசரி நீங்கள் பல்துலக்கும் முன்பு சொத்தை பல்லின் ஓட்டையில் வைத்தால் போதும். ஒரு மணி நேரத்துக்கு பின்பு பல் தேய்க்க வேண்டும்.
இப்படிச் செய்வதால் கிருமிகள், பாக்டீரீயாக்களை நாம் பல் துலக்கும்போது வெளியேற்றிவிடும். இதை கொஞ்சநாள்கள் பாளோ செய்தாலே சொத்தைப்பல் பிரச்னையை போக்கிவிடலாம்.