தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இவர் நடித்து வெளியான prince திரைப்படம் சரியாக போகவில்லை, இயக்குனர் ,ராஜசேகர், இயக்கத்தில் ,மாவீரன், திரைப்படத்தில் தற்போது ,சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார், அதிதி சங்கர் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் தனது தந்தையின் பெயரில் நடத்தி வரும் ‘தாஸ் அறக்கட்டளை’ மூலம் குறிப்பிடத்தகுந்த சமூக சேவை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் சிவகார்த்திகேன் அந்த வகையில், சிவகங்கை மாவட்ட மக்களின் சேவைக்காக ரூ.21 லட்சம் மதிப்புள்ள நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்சை நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கியுள்ளார்.
நேற்று இந்த ஆம்புலன்ஸ் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது,இதற்கான விழா மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நடந்தது,சிவகார்த்திகேயன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது,தற்போது, நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த சேவையை சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.