நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்பட ட்ரைலர் காட்சியை லண்டன் நாட்டில் வெளியிட்ட காட்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.வாரிசு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரின் புதிய திரைப்படமான “வாரிசு”, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வருகிறது. மேலும் இப்படமானது பொங்கல் பண்டிகையையொட்டி வெளியிடப்படவுள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மேலும், மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அண்மையில் கூட இத்திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாரிசு ப்ரோமோஷன் வாரிசு திரைப்படத்தின் பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த நாட்களில் ட்ரைலர் காட்சி வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக மாறியிருந்தது.
இந்நிலையில் வாரிசு படத்தின் ப்ரோமோஷனுக்காக மெட்ரோ ரயிலில் வாரிசு படத்தின் போஸ்டரை ஒட்டியிருந்தனர். மேலும் பிரித்தானியாவிலும் விஜய் திரைப்பட போஸ்டர்களும் காட்சியளிக்கப்பட்டிருந்து.
இதேவேளை பிரித்தானியாவில் வாகனமொற்றில் பெரிய திரையுடன் விஜய்யின் வாரிசு ட்ரைலர் காட்சி வெளியாகிருந்தது. அக்காட்சி தற்போது சமூம வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்ற நிலையில், விஜய்யிற்கு எங்கு எல்லாம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என வியந்து பார்த்து வருகிறார்கள்.