குழந்தை பிறப்பு என்றாலே அளவுக்கு அதிகமான சந்தோஷம் தான் நமக்கு இருக்கும். அதிலும் இரட்டை குழந்தை என்றால் கண்டிப்பாக உங்கள் சந்தோஷம் இரு மடங்கு கூடிவிடும் அல்லவா. இரட்டை குழந்தையை பெறுவதில் நிறைய கஷ்டங்கள் இருந்தாலும் நிறைய நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல ஒரே பிரசவ காலத்தில் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டு மகிழலாம்.
உங்கள் பிரசவ காலமும் எளிதாக அமையும். சில இயற்கை முறைகள் மூலம் இரட்டை கருவுறுதலை மேற்கொள்ளலாம். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல,
அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே நிகழும் என்று சொல்ல முடியாது. அது கருமுட்டை மற்றும் விந்துவை பொறுத்ததுடன், பெண்ணின் பரம்பரையில் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தாலும் இரட்டைக் குழந்தைகள்
பிறக்க வாய்ப்புள்ளது. இப்போது இந்த இரட்டைக் குழந்தைகள் பற்றி காண்போம்.