பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வீட்டிலிருந்து வெளியேறிய தனலட்சுமி வெளிப்படையாக பேசியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சி கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை சுவாரஸ்யம் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போட்டியில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 8 போட்டியாளர்களுடன் நகர்ந்துக் கொண்டிருந்தது.

தனலெட்சுமி

பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டைகள் மற்றும் கலவரங்கள் தான் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் தான் தனலட்சுமி.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தனலட்சுமி திடீரென வெளியேறியது அப்போது பேசுபொருளாக மாறியது. அதுமட்டுமின்றி, சில வீடியோக்களில் அல்லது நேரடி நிகழ்ச்சிகளில் தனலட்சுமி இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

இதனால், பிக்பாஸ் வீட்டில் உள்ள ரகசிய அறையில் தனலட்சுமி இருப்பதாகவும், அவர் விரைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார் எனவும் சில தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். குறித்த நேர்காணலில் அவர் தெரிவித்திருப்பதாவது, எனக்கு இவ்வளவு சப்போர்ட் இருக்கும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. நான் எதிர்ப்பார்க்காத மக்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது.

பிக்பாஸ் நன்றி நாள் வெளியில் இருந்து பார்க்கும் விதமும் உள்ளே இருந்து பார்க்க்கும் விதமும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது அந்த கருத்துகளை எல்லாம் உடைத்து விஜய் டிவியில் நேரலையாக வந்துள்ளார் தனலட்சுமி.

இதில் பிக்பாஸ் வீட்டில் இத்தனை நாட்கள் விளையாடிய ஆட்டம் மற்றும் மற்ற போட்டியாளர்கள் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். லைவ் வர தாமதம் ஆனதற்கு என்ன காரணம் என்று தனலட்சுமியிடம் கேட்டபோது, “வெளியே வந்ததும், பழக தாமதமானது.

அம்மா வீட்டில் சில பிரச்சனைகள் இருந்தன. அதெல்லாம் முடிச்சிட்டு இங்க வந்து உட்காருங்க போதும் என்றாள். அதற்காக அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். தனலட்சுமி கூறினார்.
போட்டியாளர்கள்

பிக்பாஸ் வீட்டில் குறித்து பேசுகையில், அசீம் ரொம்ப நல்லர், பிக்பாஸ் வீட்டில் ரக்ஷிதா தான் நடிக்குறாங்க, எனக்கு வீட்டில் மணிகண்டனையும், கதிரையும், அசீம் அண்ணாவை மட்டும் தான் மிகவும் பிடிக்கும்.

ஜனனி கடைசி வாரம் மட்டும் தான் ஒழுங்காக விளையாடினார் தொடர்ந்தும் அப்படியே விளையாடி இருந்தால் இன்னும் அந்த வீட்டில் இருந்துருப்பார். மேலும் தனக்கு அந்த வீட்டில் விக்ரமனையும் அமுதவானனையும் பிடிக்காது என்று தெரிவித்திருந்தார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares