பிரபல பாடலாசியர் திடீரென மரணமடைந்த செய்தியைக் கேட்ட திரையுலகினரும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மலையாள பாடலாசிரியர் பீயர் பிரசாத் நேற்று தனது 61ஆவது வயதில் நேற்று காலமாகியுள்ளார். இவர் 1961ல் குட்டநாடு மான்கொம்பு கிராமத்தில் பிறந்தவர்.
1993ஆம் ஆண்டு ஜானி படத்திற்காக திரைக்கதை எழுதியுள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு கேரள மாநில திரைப்பட விருதை வென்றுள்ளார். இவர் இதுவரை மலையாள சினிமாவில் 600 பாடல்கள் எழுதியுள்ளார். இவர் சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.
மேலும், தமிழில் இளையராஜா இசையில் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் படத்தில் ஒரு பாடலையும் எழுதியுள்ளார்.
காரணம் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருந்தார்.
சில நாட்களுக்கு முன், ஒரு சேனல் நிகழ்ச்சிக்காக திருவனந்தபுரம் வந்தபோது, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் மூளையில் காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் வைத்தியாசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு சினிமா துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.