பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான அசீமிற்கு கமல்ஹாசன் சர்ப்ரைஸ் gift ஒன்றை கொடுத்திருக்கின்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 5 சீசன்கள் முடிந்து தற்போது 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
ஆரம்பத்தில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 9 பேருடன் சென்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் அண்மையில் ஜனனி மற்றும் தனலட்சுமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர். இந்நிலையில் இன்றும் ஒருவர் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேற இருக்கின்றார்.
இந்நிலையில் இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களின் நண்பர்கள், உறவினர்களை வரவழைத்து போட்டியாளர்களை திடமாக்கும் வகையில் கப்படுத்தியிருக்கிறார்கள்.
அந்த வகையில் அசீமை பார்ப்பதற்காக அவரது சகோதரர் மற்றும் நண்பர் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்திருந்தார்.
இது பற்றி நேற்றைய நிகழ்ச்சியில் கமல் கேட்டபோது, அப்போது அசீம்,”அப்பா, அம்மா வருவாங்கன்னு நெனச்சேன். ஆனா அவங்க வரல. என்னுடைய மகன் ரயான் வருவான்னு நெனச்சேன்.
குறும்பா பாடல் போடும்போது, துருவ் வந்தாரு. அப்போ, எமோஷனலா இருந்துச்சு. ரயான் வந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஆனா அவனுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க.அவனை ரொம்ப மிஸ் பண்ணேன். இருந்தாலும் என் தம்பி வந்தது சந்தோஷமா இருந்துச்சு. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சொல்ற மாதிரி பல நேரத்துல எனக்கு சப்போட்டா என் தம்பி இருந்திருக்கான்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட கமல்,”இந்த நிகழ்ச்சிக்கு வரலைன்னா ஞாயிற்றுக்கிழமை உங்க பையனை மீட் பண்ணுவேன்னு சொன்னீங்க. ஸ்டோர் ரூம்ல ஒரு பொருள் இருக்கு. எடுத்துட்டு வாங்க” என்றார். அசீம் அதனை எடுத்துவர, அதனை பிரிக்கும்படி சொல்கிறார் கமல். அதனை அசீம் பிரிக்க, போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதனுள் அசீமின் மகன் ரயானின் புகைப்பட பிரேம் இருப்பதை கண்டு அசீம் நெகிழ்ச்சியடைந்து கமலுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்.