மழலையின் பேச்சை கேட்டு குழந்தையாக மாறிய காளை மாடு ஒன்றின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் இடம்பெற்ற பல்லேலக்கா பாடலில் ஆடு மாடு மீது உள்ள பாசம் வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும் என்றவர் இடம் பெற்றிருக்கும். அந்த வரிக்கு ஏற்ப தான் இன்றைய கிராமங்களில் தனது வீட்டில் வளர்க்கும் விலங்குகள் மீது மக்கள் அதிக பாசம் வைத்துள்ளனர். பதிலுக்கு அவர்களும் தனது உரிமையாளரின் மீதும் அவர்களது குடும்பத்தின் மீதும் உண்மையான அன்பு மாறா பற்றும் கொண்டிருக்கின்றன.
அந்தவகையில் குழந்தை ஒன்று தனது வீட்டில் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை இடம் சென்று தன் போல் உட்கார என்று உட்கார்ந்து காண்பிக்கிறது. பதிலுக்கு அந்த காளை மாடும் குழந்தையாக மாறி அந்த சின்னஞ்சிறு குழந்தை சொல்வதை அப்படியே கேட்டு தரையில் அமர்கிறது. இந்த வீடியோ பதிவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோவை கண்ட இணையவாசிகள் பலரும் இவர்களது பாசப்பிணைப்பை கண்டு மெய்சிலிர்த்து வருகின்றனர்
அந்த வகையில் மழலையின் பேச்சை கேட்டு குழந்தையாக மாறிய காளை மாடு ஒன்றின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
நீங்கள் பார்க்கவந்த வீடியோ இதோ.