குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். வளரிளம் பருவத்தில் குழந்தைகள் செய்யும் சேட்டையையும், அவர்களின் ரசனையையும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். 

அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும். குழந்தைக்காக இதனால் தான் பலரும் தவம் இருக்கிறார்கள். குழந்தை இல்லாததன் வலி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மட்டும்தான் தெரியும்.

இங்கேயும் அப்படித்தான். ஒருகுட்டிப் பையனின் செயல் இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது. அப்படி அந்த சிறுவன் என்ன செய்தான் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். அவனுடைய வகுப்பறையில் மாணவ, மாணவிகள் சேர்ந்து அமர்ந்திருந்தனர். அந்தப் பையனுக்கே அதிகபட்சம் ஆறு, ஏழு வயதுதான் இருக்கும். பக்கத்தில் இருக்கும் சக மாணவியின் ஆடை லேசாக விலகியிருக்கிறது. இதைப் பார்த்த அந்த மாணவன், அந்த மாணவியிடமே சொல்லாமல் அவனே அந்த மாணவியின் ஆடையை ஒழுங்காக போட்டுவிடுகிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். அந்தச் சிறுவனின் பண்பையும், அவன் பெற்றோரின் வளர்ப்பையும் நீங்களே மெச்சுவீர்கள். 

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares