இரவு 7 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது சுந்தரி என்ற நாடகத் தொடர். ஒரு கிராமத்து பெண் தன்னுடைய நிறத்தால் அவளுக்கு ஏற்படும் அவமானங்கள் மற்றும் கிண்டல்களுக்கு எதிராக எவ்வாறு போராடுகிறாள் என்பதே கதை.
சுந்தரி சீரியலில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கேப்ரில்லா செல்லஸ். இவர் டிக் டாக் என்ற இணையதள செயலி மூலம் பிரபலமானவர். இளைஞர்களால் தற்போது விரும்பி செய்யப்படுகிறது டப் மாஷ். இதன் மூலம் நிறைய பேர் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். சில சமயங்களில் இதன் மூலம் எதிர்பாராத அளவுக்கு புகழும் அடைகிறார்கள்.
இவருக்கு என்று ரசிகர்களும் ஏராளம் இருக்கிறார்கள். இவருக்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.இவர் நயன்தாரா நடித்த ஐரா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் எதிர் பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை.
தற்போது கேப்ரில்லா நடித்துக் கொண்டிருக்கும் சுந்தரி சீரியல் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படுகிறது. தற்போது இவர் தன்னுடன் நடிப்பவருடன் ஷூட்டிங் இடைவேளையில் சேர்ந்து செய்யும் டப் மாஷ் இணையத்தில் வைரலாகி வருகிறது.