கடந்த 5 சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் போட்டியாளர்கள் பாதுகாப்பாக விளையாடி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் சற்றும் சுவாரசியமும் பரபரப்பும் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது. காரணம் அசீம், விக்ரமன், ஷிவின் மற்றும் தனலட்சுமியை குறிப்பிடலாம், மற்ற போட்டியாளர்கள் மிக பாதுகாப்பாக விளையாடி வருவதாக கூறப்படுகிறது.

ஜனனி மேல ஏன் அவ்ளோ பாசம்? அமுதவாணனை கேட்ட மனைவி இதில் தனலட்சுமி கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார், அடுத்த வாரத்தில் ஜனனி எலிமினேட் ஆனார். தற்போது பிக்பாஸில் Freeze Task சென்று கொண்டிருக்கிறது, இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் உள்ளே வந்துள்ளனர்.
அமுதவாணனை கேட்ட மனைவி

அமுதவாணனின் மனைவி மற்றும் மகன்கள் வந்திருந்தனர், அப்போது அவரது மகன் மற்ற போட்டியாளர்களை போன்று மிமிக்ரி செய்ய பிக்பாஸே வீடே களைகட்டியது.

பேசிக்கொண்டிருக்கும் போது அமுதவாணனிடம் அவரது மனைவி, எங்களை நினைச்சு Feelபண்ணல, போனவங்கள நினைச்சு Feel பண்றியா? என கேட்க, ஜனனி மற்றும் தனலட்சுமி இருவருமே Freeze Taskல் பெற்றோர்கள் வருவதை அதிகம் எதிர்பார்த்தனர், ஆனால் அது நடக்காமல் போய்விட்டது என தெரிவித்தார்.

ஏன் ஜனனி சென்றதற்காக அதிகம் அழுதீர்கள் என்ற கேட்க, என் கூட தான் அதிகமா பேசிட்டு இருப்பா, என் கூட அவளுக்கு செட் ஆனது, அப்படி இருக்கும் போது கடைசியா நீ நல்லா பண்ணம்மா கூட நான் சொல்லலை என தெரிவித்தார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares