தன் அரசியல் அடையாளத்தை எந்த இடத்திலும் மறைக்காமல் செயற்பட்டு வருவதது தனக்கு பெருமையளிக்கிறது என திறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் விக்ரமன்
தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 80 நாட்களுக்கு மேல் செல்லுகின்றது. தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் டுவிட்டரில் சாதி, மத வெறிக்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை பதிவு செய்து வந்த விக்ரமன், தற்போது பிக்பாஸ் வீட்டிலும் இதையே தொடர்ந்தும் செய்து வருகிறார்.
ஆரம்பத்தில் ஏனோ தானோ என்று விளையாடிய விக்ரமன் நாட்கள் போக போக டைட்டில் வின்னர் ஆகும் அளவிற்கு போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் எந்த போட்டியாளர்கள் என்ன தவறு செய்தாலும் அதை தட்டிக்கேட்கும் முதல் ஆளாக இருப்பார் விக்ரமன்.
இதனால் தான் அசீம் மற்றும் விக்ரமன் இடையில் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படும்.திருமாவளவன் கருத்து இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணலில் கலந்துக் கொண்ட சிறுத்தைக் கட்சிகளின் தலைவன் திருமாவளவன் விக்ரமன் குறித்து பெருமையாக பேசியுள்ளார்.
“என்னால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. ஆனால் அவருடைய பேச்சு, விமர்சனங்கள் எல்லாம் ஸ்க்ரீன் ஷொட் மூலமாக தோழர்கள் எனக்கு அனுப்புகிறார்கள். இப்போது கூட வோட்டிங் ஏதோ போடுகிறார்கள். அதை நான் பார்க்கவில்லை. நான் பெருமைப்படுகிறேன். பிக்பாஸில் இருந்து எனக்கு ஒரு வாய்ப்பு வருகிறது.
நான் போகலாமா என்று அவர் என்னிடம் கேட்டார். தாராளமாக செல்லுங்கள் என்று நான் சொன்னேன் நான் தான் அவரை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தேன் எனக் கூறியுள்ளார்.