சரியான நேரத்தில் சரியானவர்களுக்கு செய்யப்படும் உதவியே என்றும் காலத்தால் போற்றப்படும். பசியோடு இருப்பவர்களுக்கு வழங்கிய உணவும், மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு கிடைக்கும் மருத்துவ வசதியும், துன்பத்தில் இருப்பவர்களுக்கு உடன் இருப்பவர்கள் கூறும் ஆறுதலான வார்த்தைகளும் அவர்களின் காலத்திற்கும் நினைவில் இருக்கும்.

தாய் தன்னுடைய குழந்தைகளை எந்த வித எதிர்பார்ப்புமின்றி அன்புடனும், அக்கறையுடனும், பொறுப்புடனும் வளர்ப்பார்கள். குழந்தைகள் அன்னையின் பார்வையில் இருந்து சற்று விலகினாலும் அவர்களை காணாது சஞ்சலம் அடைவார்கள். குழந்தைக்கு எந்த வித துன்பமும் நேர்ந்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக ஒவ்வொரு தாயும் செயல் படுவார்கள். அதனால் தான் பெரியோர்கள் தாயை போல் ஒரு தெய்வமும் இல்லை என்றார்கள்……

தாயை போல் ஒரு நல்ல உள்ளம் கொண்ட ஒரு ஜீவனை இந்த உலகில் நாம் காண இயலாது. வாழ்கை முழுக்க தான் பெற்ற குழந்தைகள் எந்த துன்பமும் இன்றி நலமுடன் வாழ வேண்டும் என இறைவனிடம் வேண்டும் உயிர் தாய் தான். தான் பெற்ற குழந்தைகளுக்கு எவ்வளவு வயதானாலும்…….தாய் தான் பெற்ற குழந்தைகளை என்றும் குழந்தையாகவே கருதுவாள். அந்த தாய்க்கு ஒரு இன்னல் என்றால் குழந்தைகள் கலங்கி விடுவார்கள். மேலும் தங்களால் ஆன உதவியை செய்து தாயிடம் அன்பாக இருப்பார்கள்.

இங்கே ஒரு பெண் ஏணியில் ஏறி உயரத்தில் வேலை ஓன்று செய்து கொண்டிருக்கும்போது அந்த ஏணியானது அவரின் கால் தடுமாற்றத்தால் கீழே சரிந்து விடுகிறது. அப்போது அருகில் இருந்த மகன் செய்வதறியாது நிற்கும் போது உடனடியாக சென்று அந்த ஏணியை சரியான முறையில் நிமிர்த்து வைக்கிறார். அந்த சிறுவன் அந்த ஏணியை தூக்கி விடுவானா என்று சந்தேகம் கொண்டு பார்க்கும் போதே என் தாய்க்கு ஒரு இன்னல் என்றால் நான் அதை உடனடியாக போக்குவேன் என்று செயலாற்றியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மகனின் தைரியமான புத்திசாலித்தனமான இந்த நிகழ்வை சமூக வலைத்தளத்தினர் கொண்டாடி வருகின்றனர். அந்த காணொலியை இங்கே காணலாம்

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares