குழந்தைகள் முதல் முதலாக பள்ளி செல்லும் போது பள்ளி செல்லமாட்டேன் என்று அடம் பிடித்து அழுதுகொண்டே செல்வார்கள். ஒரு சில குழந்தைகள் ஆர்வத்தோடு கல்வி கூடத்திற்கு செல்வதும் உண்டு. ஆசிரியர்களிடம் பழகும் வரை அவர்கள் சற்று தயக்கத்துடனே பள்ளி சென்று வருவார்கள்.
அழுது கொண்டு பள்ளி செல்லும் குழந்தைகளின் மனநிலைமையை மாற்றுவதற்காக விளையாட்டு பொருட்கள், குக்கீஸ், சாக்லட் போன்ற இனிப்புகள் வழங்கி அவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிப்பார்கள் ஆசிரியர்கள்.
ஆசிரியர்கள் வேடிக்கையாக கதைகள், விளையாட்டுகளை கற்று தரும் போது மாணவர்கள் ஆர்வமுடன் கற்று கொள்வார்கள்.
அவர்கள் கற்ற பாடங்களை வீட்டில் தங்கள் பெற்றோரிடம் கூறுவார்கள். பெற்றோர்களுக்கு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பதற்குள் வீடு புயல் வந்தது போல் ஆகி விடும்.
அவர்களின் வீட்டு பாடங்களை எழுத வைத்து காலையில் குளிப்பாட்டி, உணவு ஊட்டி அவர்களை தயாராக்கி பள்ளிக்கு அனுப்புவதற்குள் வீட்டில் இருக்கும் அனைவரும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். வீட்டில் தாத்தா,பாட்டிகள் இருந்தால் அவர்கள் குழந்தைகளிடம் கொஞ்சி பேசி அன்பாக குழந்தைக்கு உணவு ஊட்டி சரியான நேரத்திற்கு பள்ளிக்கு அனுப்பி வைப்பதற்கு உதவுவார்கள். அவர்கள் ஊருக்கு சென்று விட்டால் குழந்தைகளின் முகம் வாடி விடும்.
இங்கேயும் ஒரு சிறுவன் பள்ளிக்கு இரண்டு நாட்களாக அழுது கொண்டு வர அந்த சிறுவனின் ஆசிரியர் அவனிடம் பொறுமையாக காரணம் கேட்டபோது அந்த சிறுவன் தன்னடக்கத்தோடு கைகளை கட்டி கொண்டு பதில் அளித்தது சமூக வலைதளவாசிகளை கவர்ந்துள்ளது. அந்த காணொலியை இங்கே காணலாம்