சுமார் 70 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 6.

இதுவரையிலும் பாதுகாப்பாக விளையாடி வந்த போட்டியாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென கமல்ஹாசன் வாரந்தோறும் கண்டித்து வருகிறார்.

மற்ற சீசன்களை காட்டிலும் வார இறுதியில் கமல்ஹாசன் கண்டிப்புடன் நிகழ்ச்சியை கொண்டு செல்வதாகவும், சுவாரசியம் நிறைந்ததாகவும் உள்ளதாகவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதுவரையிலும் இந்த சீசனில் பொம்மை டாஸ்க், பேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், பள்ளி மாணவர்கள் டாஸ்க் என பலவிதமான டாஸ்க்கள் கொடுக்கப்பட்டன.

ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் வெளியேறி வரும் நிலையில், கடந்த வாரம் ஜனனி வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் மிக முக்கியமான போட்டியாளராக பார்க்கப்படும் தனலட்சுமி வெளியேறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ADK வெளியேறிவிட்டதாகவும், மருத்துவ சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருக்கு என்ன நடந்தது? எதனால்? என்பது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரலாம் என கூறப்படுகிறது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares