2022ம் ஆண்டு முடிந்து 2023ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது, கடந்த சில ஆண்டு காலமாகவே பலருக்கும் வாழ்க்கையிலும் சரி தொழிலும் சரி எதிலும் திருப்தியிருந்திருக்காது பிறக்கப்போகும் புத்தாண்டில் யாருக்கெல்லாம் நவ கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. நினைத்த காரியங்கள் எல்லாம் கைகூடுமா?, யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

புதிய ஆண்டு

நிகழும் மங்கலகரமான ஸ்வஸ்திஸ்ரீ சுபக்ருத் வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ஆம் திகதி பின்னிரவு 17ஆம் திகதி முன்னிரவு இதற்குச் சரியான ஆங்கிலம் 01 ஜனவரி 2023 அன்றைய தினம் தினசுத்தி அறிவது சனிக்கிழமை பின்னிரவு-ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு-சுக்லபக் ஷ தசமியும்-அஸ்வினி நட்சத்திரமும்-சிவ நாமயோகமும்-கௌலவ கரணமும்- மேஷ ராசியில்-ரிஷப நவாம்ச சந்திர அம்சத்தில்-கன்யா லக்னத்தில்-ரிஷப நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 43.35-க்கு-நள்ளிரவு 12.00-க்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

புத்தாண்டின் கிரக நிலையில் நவக்கிரகங்களும் சாரா பலத்தின் அடிப்படையில் உலகத்திலிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

புதிய ஆண்டின் கிரகங்களுடைய பாதசாரங்கள்

லக்னம் – ஹஸ்தம் 2ல் – சந்திரன் சாரம்,சூரியன் – பூராடம் 1ல் – சுக்கிர சாரம்ந்திரன்-அஸ்வினி 2ல்-கேது சாரம், செவ்வாய்(வ) – ரோகிணி 3ல்-சந்திர சாரம்,புதன்(வ)-மூலம் 3ல்-கேது சாரம் குரு-உத்திரட்டாதி 3ல் – சுய சாரம் சுக்கிரன் – உத்திராடம் 2ல்-சூர்ய சாரம் சனி – திருவோணம் 4ல் – சந்திர சாரம் ராகு – பரணி 3ல்-சுக்கிரன் சாரம்கேது – விசாகம் 1ல் – குரு சாரம்.

பொதுப்பலன்கள்
வெளிநாட்டின் வருவாய், முதலீடுகள் அதிகரிக்கும், தொழில் வளர்ச்சி பெறும்,உள்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும்,புதிய வகை விமானங்கள், போர்க் கருவிகள் ராணுவத்திற்கு பலம் சேர்க்கும் பலம் வாய்ந்த நாடுகளில் நமது நாட்டிற்கும் தனித்தன்மை ஏற்படும்,மழையின் அளவு ஓரளவு இருக்கும்,விவசாயம் செழிக்கும்,கல்வித்துறையில் சீர்திருத்தம் ஏற்படும்,கல்வியின் தரம் மேம்படும். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்,விளையாட்டில் நமது நாட்டைச் சார்ந்தவர்கள் சாதனைகள் பெறுவார்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares