ஜி பி முத்து, 10வயதில் வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்து அதனது 28ஆவது வயதில் தனியாக தொழில் செய்ய (Carpenter) ஆரம்பித்தார்,3ஆவது வரைக்கும் படித்தவர்,ஒரு விபத்தில் தம்பியை இழந்தார்,தம்பி குடும்பத்தையும் சேர்த்து பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார்,அதே நேரம் தொழில் சருக்கல் என பல பிரச்சினைகளை சந்தித்தார்.
35வயதில் தான் முதல் Smart Phone வாங்கினார்,இந்த பிரச்சினைகளில் இருந்து மனதை திசை திருப்ப டிக்டாக் செய்ய ஆரம்பித்தார் அதில் அடிமையாயகவும் மாறினார்,ஒரு கட்டத்தில் டிக்டாக் தான் பிழைப்பு என்றும் இருந்தார் குடும்ப பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியாமல் தற்கொலை முயற்சியும் மேற்கொண்டார்,Tiktok தடை செய்யப்பட்ட பிறகு யூடியூப்பில் களம் இறங்கினார் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் G.P.முத்து சோஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றவர் டிக்டாக் மூலம் பிரபலமான இவர் அதன் தடைக்கு பின்னர் யூடிப் பக்கம் கரை ஒதுங்கினார் சோஷியல் மீடியாவில் இவர் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் மிக பிரபலம் அதற்கென்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.
பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜிபி முத்து இரண்டாவது வாரத்திலே வீட்டின் தலைவரானார் இவரின் ஒவ்வொரு செயலும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இரண்டே வாரத்தில் தனது குடும்பத்தினர் நியாபகமாக இருப்பதாக கூறி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தார் G.P.முத்து.
கடைசி வரை மற்ற போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட G.P.முத்து இரண்டே வாரத்தில் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிக்பாஸ் வீட்டை விட்டு வந்ததும் சன்னி லியோனுடன் இணைந்து நடித்த தனது ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
மேலும் ஜிபி முத்துவிற்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. நயன்தாராவின் ,கனெக்ட், படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்து நடிக்காமல் போனது இந்நிலையில் ‘கனெக்ட்’ படத்தின் ஸ்பெஷல் ஷோவிற்கு படம் பார்க்க சென்று பாதியிலே வெளியேறினார் G.P.முத்து இதுக்குறித்து பேட்டி ஒன்றில் விளக்கமளித்த அவர், “கனெக்ட் படத்தின் ஈவண்ட் நடத்தியவர்கள் என்னிடம் சொன்ன விதம் வேற, ஆனா அங்கு நடத்துன விதம் வேற.
நயன்தாரா கூட உட்கார்ந்து படம் பார்க்கலாம் வாங்கனு கூப்பிட்டாங்க ஆனா அங்கு கூப்பிட்டு போய் ஏதோ ஒரு ஓரமா உட்கார வச்சாங்க, எனக்கு ஒருமாதிரி ஆகிடுச்சு அதனால படம் பார்க்காமலேயே வெளிய வந்துட்டேன் இதெல்லாம் நயன்தாராவுக்கு தெரியாது அவரது பவுன்சர்கள் என்னை ரொம்ப தரக்குறைவா பேசினாங்க தூரபோனு சொல்லிட்டாங்க.
இதனால் நான் அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன், பின்னர் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் என்னை போனில் அழைத்தார், பாதி தூரம் வந்துட்டேன், இன்னொரு முறை சந்திக்கலாம்னு சொல்லிட்டேன்” என தெரிவித்துள்ளார்.