தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு போட்டியாளரும் செய்யாத சாதனையை மணிகண்டன் செய்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 6 பிரபல தொலைக்காட்சியொன்றில் பெரியளவில் பார்க்கப்பட்டு வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி. முதல் சீசன் முதல் இப்போது வரை மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் ஆன இந்நிகழ்ச்சி, தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது இன்று 6ஆவது சீசன் நடைபெற்று வரும் நிலையில், இன்று வரையும் சுவாரஷ்யம் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது 70 நாட்களை கடந்து 10 போட்டியாளர்கள் காணப்படுகின்றனர்.மணிகண்டனின் சாதனை
இந்நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன் ராஜேஷ் ஆவார். அவர் இதுவரை முடிந்த 10 வாரங்களில் இவர் ஒரு வாரம் மட்டுமே நாமினேஷன் செய்யப்பட்டார்.
அடுத்தடுத்த வாரங்களில் நாமினேஷனில் சிக்காமல் தப்பித்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் மணிகண்டன் தான் அதிகமுறை தலைவர் ஆக இருந்துள்ளார். முதன் முறையாக தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் சாதனையாக படைத்துள்ளார்.