நாம் தினசரி சாப்பிடும் உணவான சைவ உணவுகளிலேயே பல சத்துக்கள் அடங்கியுள்ளது என்றாலும் மீன் உணவை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.நெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.செல்லுலார் மற்றும் இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கும், இந்த திசுக்களில் உள்ள கோளாறுகளை சரி செய்யவும் தேவையான அளவு புரோட்டீன் நெத்திலி மீனில் உள்ளது.

நெத்திலி மீனில் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ, செலினியம், போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன.நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் சத்து.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், கண் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.நெத்திலி மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும்.
மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares