மனிதர்கள் தங்களது வாழ்க்கையை இலகு படுத்திக் கொள்ளவும் துரிதப்படுத்திக் கொள்ளவும் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப முனைப்புகளை நாளுக்கு நாள் கண்டறிந்து கொள்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சில தொழில்நுட்பங்கள் மனிதர்களின் வாழ்க்கையே மாற்றி அமைத்து விடுகிறது.தொழில்நுட்பங்கள் மனிதனை வானளவிற்கும் அதனையும் தாண்டியும் உயர்த்தி நிற்கின்றது என்றால் அது பிழையாகாது.

விமானம் இவ்வாறானோர் மனிதனின் அரிய கண்டுபிடிப்பாகும் அண்மையில் பறக்கும் சைக்கிள் என்ற தலைப்பில் ஓர் வீடியோ சமூக ஊடகங்களில் வெகுவாக வைரலாகி வருகின்றது.இந்த வீடியோவை பார்த்த பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டனர். பறக்கும் சைக்கிள் ஒன்றை சுற்றி சிலர் குழுமியிருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முகமத் ஜாம்சத் என்ற நபர் இந்த காணொளி பற்றி ஓர் பதிவினை டுவிட்டரில் இட்டுள்ளார்.இவர் சைக்கிளை ஓட்டிக்கொண்டு பிளேனை செலுத்துவதற்கு விரும்புகிறார். வித்தியாசமான வானூர்தி ஒன்றை நபர் ஒருவர் பறக்கச் செய்யும் காட்சி இந்த காணொளியில் காணப்படுகிறது.

விமானம் ஒன்றில் சைக்கிளைப் பெடல் செய்து அதனை பறக்கச் செய்யும் காட்சி இந்த காணொளியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares