பிக்பாஸ் வீட்டிலிருந்து இலங்கை பெண் ஜனனி வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகின்றது.
இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ரக்ஷிதா, மணிகண்டன் என ஆறுபேர் இடம்பெற்றுள்ளனர். இதில் முதலில் குறைவான வாக்கு பெற்றதாக மணிகண்டன் வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், பின்பு ஏடிகே வெளியேற்றப்படுகின்றார் என்ற புதிய தகவல் வெளிவந்தது.
தற்போது இலங்கை பெண் ஜனனி பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவதாக உறுதியாக தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் முன்பு சீசன் 6ல் முதல் ஆர்மி இலங்கை பெண் ஜனனிக்கே ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜனனி ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து வரும் நிலையில், நாளை இரவு உறுதியாக நிகழ்ச்சியில் கண்டு கழித்த பின்பே மக்கள் திருப்தியாக இருப்பார்கள். அதுவரை ஒரு கேள்வியுடனும், குழப்பத்துடனுமே காணப்படுவார்கள்.